Saturday, July 10, 2010
Spring, Summer, Fall, Winter...... Summer
இது நான் சமீபத்தில் பார்த்த Kim Ki - duk என்ற இயக்குனரின் கொரிய மொழிப் படம்.
மிகவும் ரம்மியமான இயற்கைச் சூழலில் படமாக்கப் பட்டிருந்தது. ஏரி ஒன்றின் மேல் சிறிய படகு வீட்டில் புத்த மத குரு சிறுவன் ஒருவனுடன் வசித்து வருகிறார். அவர்களிருவரும் சிறிய படகில் கரைக்குச் சென்று மூலிகை மற்றும் தேவையான பொருட்களை வாங்கி வருகின்றனர்.
ஒரு நாள் மூலிகைப் பறிக்கச் செல்லும் சிறுவன் விளையாட்டாக ஒரு மீனின் முதுகில் கல் ஒன்றைக் கட்டி மீண்டும் தண்ணீரில் விட்டு அது சிரமப்பட்டு நீந்துவதைக் கண்டு சந்தோஷம் கொள்கிறான். அவ்வாறே ஒரு தவளை மற்றும் பாம்பின் முதுகிலும் கல்லைக் கட்டி அவற்றின் துன்பத்தைக் கண்டு கைக்கொட்டிச் சிரிக்கிறான். இதைக் கண்ட குரு அன்றிரவு அவன் தூங்கும் பொழுது அவனது முதுகில் ஒரு கல்லைக் கட்டிவிடுகிறார். மறுநாள் காலை அவன் எழுந்து குருவிடம் வந்து கல்லை அவிழ்த்து விடுமாறு கேட்கிறான். அதற்கு அவர் மீனின் முதுகில் கல்லைக் கட்டினாயா என்று கேட்கிறார் ஆம் என்கிறான் சிறுவன் அழுதுகொண்டே. தவளை முதுகில் கல்லைக் கட்டினாயா என்று கேட்கிறார், ஆம் என்கிறான் சிறுவன் மீண்டும் அழுதுக்கொண்டே. பாம்பின் முதுகில் கல்லைக் கட்டினாயா என்று கேட்கிறார்? ஆம் என்கிறான் சிறுவன். அவற்றின்முதுகிலிருந்துக் கல்லை அவிழ்த்து விட்டு வரச் சொல்லுகிறார் குரு. மேலும் அவற்றில் எவையேனும் இறந்து போயிருக்குமேயானால் நீ வாழ்நாள் முழுவதும் இந்தச் செயலை எண்ணி மனதில் கல்லைச் (பாரமாக) சுமப்பாய் என்கிறார். அவன் மீண்டும் காட்டுக்குள் சென்று மீனைத் தேடுகிறான், அது உயிருக்குப் போராடி இறந்து போயிருந்தது. அழுகிறான். தவளை நகர முடியாமல் துடித்துக் கொண்டு உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தது. அதைக் கண்டு மீண்டும் அழுகிறான்.பாம்பு வேறு சில உயிரினங்களால் தாக்கப்பட்டு உயிர் நீத்திருந்தது. மீண்டும் அழுகிறான். அன்று முழுவதும் தன்னுடைய முதுகிலே கல்லைக் கட்டிக்கொண்டு அலைகிறான். மனத்திலும் கூட.
நாட்கள் நகர்கின்றன. சிறுவன் வளர்ந்து வாலிபப் பருவம் அடைகிறான். அந்தப் புத்த குருவினிடம் சிகிச்சைக்கு ஒரு இளம்பெண்ணை அழைத்து வருகிறாள் அவளது தாய். அந்தப் பெண்ணை விட்டுத் தாய் சென்று விடுகிறாள். நமது இளைஞனோ அந்த பெண்ணின் மேல் மோகம் கொள்ள இருவரும் இணைகின்றனர். அதைக் கவனித்தக் குருவோ இது இயற்கைத் தான் ஆனால் அவளைத் திரும்பிச் சென்றுவிடுமாறுக் கூறுகிறார். இதைக் கேட்ட இளைஞன் பிரிவை எண்ணி அழுகிறான். குரு மேலும் கூறுகிறார் "lust leads to desire for possession, and possession leads to murder".
அந்தப் பெண்ணைத் தேடி அவ்விளைஞன் தன் குருவை விட்டுச் சென்றுவிடுகிறான். நாட்கள் நகர்கின்றன. ஒரு நாள் குரு செய்தித்தாளில் கொலைக் குற்றத்திற்காக தேடப்படும் குற்றவாளியாக அந்த இளைஞனின் படம் வந்திருப்பதைப் பார்கிறார். பிறகு தன்னைச் சந்திக்க வரும் அவனை காவல்துறைக் கைது செய்ய உதவுகிறார். இறுதியில் அவன் தண்டனைக் காலம் முடிந்து மீண்டும் வருகிறான், தான் செய்தத் தவறினை எண்ணி வருந்தி ஒரு கல்லைத் தன் முதுகில் கட்டிக் கொண்டு மலை ஏறுகிறான். பின்பு தானும் ஒரு யோகியாக மாறுகிறான்..!
ஐந்துப் பருவக் காலங்கள் ஒரு மனிதனின் வாழ்க்கைப் பருவத்தை உணர்த்துவதாகப் படமாகப்பட்டுள்ளது.
பின் குறிப்பு: இந்தத் திரைப்படத்தைப் பற்றி நான் படித்தது எழுத்தாளர் திரு. சாரு நிவேதிதா அவர்களின் வலைதளத்தில்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment