Saturday, July 10, 2010

Spring, Summer, Fall, Winter...... Summer


இது நான் சமீபத்தில் பார்த்த Kim Ki - duk என்ற இயக்குனரின் கொரிய மொழிப் படம்.
மிகவும் ரம்மியமான இயற்கைச் சூழலில் படமாக்கப் பட்டிருந்தது. ஏரி ஒன்றின் மேல் சிறிய படகு வீட்டில்
புத்த மத குரு சிறுவன் ஒருவனுடன் வசித்து வருகிறார். அவர்களிருவரும் சிறிய படகில் கரைக்குச் சென்று மூலிகை மற்றும் தேவையான பொருட்களை வாங்கி வருகின்றனர்.
ஒரு
நாள் மூலிகை
ப் பறிக்கச் செல்லும் சிறுவன் விளையாட்டாக ஒரு மீனின் முதுகில் கல் ஒன்றைக் கட்டி மீண்டும் தண்ணீரில் விட்டு அது சிரமப்பட்டு நீந்துவதைக் கண்டு சந்தோஷம் கொள்கிறான். அவ்வாறே ஒரு தவளை மற்றும் பாம்பின் முதுகிலும் கல்லைக் கட்டி அவற்றின் துன்பத்தைக் கண்டு கைக்கொட்டிச் சிரிக்கிறான். இதைக் கண்ட குரு அன்றிரவு அவன் தூங்கும் பொழுது அவனது முதுகில் ஒரு கல்லைக் கட்டிவிடுகிறார். மறுநாள் காலை அவன் எழுந்து குருவிடம் வந்து கல்லை அவிழ்த்து விடுமாறு கேட்கிறான். அதற்கு அவர் மீனின் முதுகில் கல்லைக் கட்டினாயா என்று கேட்கிறார் ஆம் என்கிறான் சிறுவன் அழுதுகொண்டே. தவளை முதுகில் கல்லைக் கட்டினாயா என்று கேட்கிறார், ஆம் என்கிறான் சிறுவன் மீண்டும் அழுதுக்கொண்டே. பாம்பின் முதுகில் கல்லைக் கட்டினாயா என்று கேட்கிறார்? ஆம் என்கிறான் சிறுவன். அவற்றின்முதுகிலிருந்துக் கல்லை அவிழ்த்து விட்டு வரச் சொல்லுகிறார் குரு. மேலும் அவற்றில் எவையேனும் இறந்து போயிருக்குமேயானால் நீ வாழ்நாள் முழுவதும் இந்தச் செயலை எண்ணி மனதில் கல்லைச் (பாரமாக) சுமப்பாய் என்கிறார். அவன் மீண்டும் காட்டுக்குள் சென்று மீனைத் தேடுகிறான், அது உயிருக்குப் போராடி இறந்து போயிருந்தது. அழுகிறான். தவளை நகர முடியாமல் துடித்துக் கொண்டு உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தது. அதைக் கண்டு மீண்டும் அழுகிறான்.பாம்பு வேறு சில உயிரினங்களால் தாக்கப்பட்டு உயிர் நீத்திருந்தது. மீண்டும் அழுகிறான். அன்று முழுவதும் தன்னுடைய முதுகிலே கல்லைக் கட்டிக்கொண்டு அலைகிறான். மனத்திலும் கூட.

நாட்கள் நகர்கின்றன. சிறுவன் வளர்ந்து வாலிபப் பருவம் அடைகிறான். அந்தப் புத்த குருவினிடம் சிகிச்சைக்கு ஒரு இளம்பெண்ணை அழைத்து வருகிறாள் அவளது தாய். அந்தப் பெண்ணை விட்டுத் தாய் சென்று விடுகிறாள். நமது இளைஞனோ அந்த பெண்ணின் மேல் மோகம் கொள்ள இருவரும் இணைகின்றனர். அதைக் கவனித்தக் குருவோ இது இயற்கைத் தான் ஆனால் அவளைத் திரும்பிச் சென்றுவிடுமாறுக் கூறுகிறார். இதைக் கேட்ட இளைஞன் பிரிவை எண்ணி அழுகிறான். குரு மேலும் கூறுகிறார் "lust leads to desire for possession, and possession leads to murder".

அந்தப் பெண்ணைத் தேடி அவ்விளைஞன் தன் குருவை விட்டுச் சென்றுவிடுகிறான். நாட்கள் நகர்கின்றன. ஒரு நாள் குரு செய்தித்தாளில் கொலைக் குற்றத்திற்காக தேடப்படும் குற்றவாளியாக அந்த இளைஞனின் படம் வந்திருப்பதைப் பார்கிறார். பிறகு தன்னைச் சந்திக்க வரும் அவனை காவல்துறைக் கைது செய்ய உதவுகிறார். இறுதியில் அவன் தண்டனைக் காலம் முடிந்து மீண்டும் வருகிறான், தான் செய்தத் தவறினை எண்ணி வருந்தி ஒரு கல்லைத் தன் முதுகில் கட்டிக் கொண்டு மலை ஏறுகிறான். பின்பு தானும் ஒரு யோகியாக மாறுகிறான்..!
ஐந்துப் பருவக் காலங்கள் ஒரு மனிதனின் வாழ்க்கைப் பருவத்தை உணர்த்துவதாகப் படமாகப்பட்டுள்ளது.

பின் குறிப்பு: இந்தத் திரைப்படத்தைப் பற்றி நான் படித்தது எழுத்தாளர் திரு. சாரு நிவேதிதா அவர்களின் வலைதளத்தில்.



Tuesday, March 2, 2010

சத்தியம் சாத்தியமா?

பொய். மனதில் இருக்கும் மகாத்மா விழித்துக் கொண்ட போதெல்லாம் பொய் பற்றிய சிந்தனை சற்று அதிகமாகவே இருக்கும். சத்திய சோதனைப் படித்தப் பின்பும், ஹரிச்சந்திரக் கதைக் கேட்டப் பின்பும் இரண்டு மூன்று நாளைக்குச் சத்தியசன்தனைப் போல் வேடம் போடமுயலும் இந்த மனது.
பொய் என்றால் என்ன என்று சற்று சிந்தித்துப் பார்த்தேன். உண்மைக்கு மாறான விஷயங்களைப் பேசுவது என்று ஒரு பொதுவான விளக்கத்தைப் பார்க்கலாம். சில சமயங்களில் உண்மையை மறைப்பதும் பொய் எனக் கருதப்படுகிறது. சரி, பொய்ப் பற்றி என்ன திடீர் விசாரிப்பு என்றால் அதற்குக் காரணம் சென்ற வாரம் அலுவலகத்தில் நடந்த ஒரு சம்பவம்.

மென்பொருள் தயாரிப்பு மற்றும் பராமரிப்பு சேவைகள் அளிக்கும் ஒரு நிறுவனத்தின் உயர் மேலாளர் (அதாவது நான் பணிபுரியும் நிறுவனம்) தனது வாடிக்கையாளரிடம் ஒரு மென்பொருளை செயல்படுத்திக் காட்டி அதன் அம்சங்களை விளக்கும் ஒரு சந்திப்பு. அந்தச் சந்திப்பின் போது என்னை மென்பொருளின் ஒரு சில செயல்பாடுகளை விவரிக்கும்படி உத்தரவு.
ஒருவழியாக எல்லாம் முடியும் தருவாயில் மேலாளர் தனது வியாபாரத் தந்திரத்தை கையில் எடுத்தார். சற்றே அரைகுறை நிலைமையில் உள்ள ஒரு (மென்)பொருளை, இதை நீங்கள் முழுப் பயன்பாட்டிற்குக் கொண்டு வர மூன்று அல்லது நான்கு வாரங்களே போதும், எல்லாம் தயார் நிலையில் உள்ளது என்று போட்டாரே ஒரு போடு. இது ஒரு அப்பட்டமான பொய் என்று அங்கு இருந்த எல்லோருக்கும் புரிந்தது. என்னைப் பார்த்து வேறு என்ன மூன்று வாரங்கள் போதாது? என்று கேள்வி கேட்டார். அடடா இது என்ன நமக்கு வந்த சோதனை இது தான் சத்திய சோதனையோ? அவர் குறிப்பிட்ட நேரம் போதும் என்றால் அருகில் இருக்கும் வாடிக்கையாளர் என்னைக் கீழ்த்தரமாகப் பார்ப்பார், இன்னும் அதிக அவகாசம் வேண்டும் எனக் கூறினால் மேலாளரைப் பகைத்துக் கொள்ள வேண்டியதாய்ப் போய்விடும். சத்யம் வத(உண்மையே பேசு) , சத்யமேவ ஜெயதே, வாய்மையே வெல்லும் போன்ற வாசகங்கள் கண் முன்னே வந்து போயின. நானோ சற்று நெளிந்து ஏதேதோ சொல்லி சமாளிக்க வேண்டியதாகி விட்டது. அப்படிச் சொன்னது நேரிடைப் பொய்யாக இல்லாமல் விவாதத்திற்குரியதாகப் போயிற்று.

இங்கே சொல்லப்பட்டது உண்மைக்குப் புறம்பான விஷயமாக இருந்தாலும் அது ஒரு வியாபார உத்தியாகப் பார்க்கப்படுகிறது. ஆக ஒவ்வொரு பொய்யும் ஏதோ ஒரு காரணத்தை முன்வைத்தே உபயோகப்படுத்தப்படுகிறது. அது சுயநலத்தினாலும், சொந்த விருப்பு வெறுப்புகளின் பேரிலும், வியாபார முன்னேற்றத்திற்காகவும் இப்படி பல விஷயங்களுக்காக உபயோகப் பட்டாலும் இறுதியில் அது உண்மைக்குப் புறம்பான பொய் தான் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

இப்படிப்பட்ட ஒரு சமூக சூழலில் சத்தியம் மட்டுமே உள்ள ஒரு உலகைக் கற்பனைச் செய்வதும், வாழ்க்கை நடைமுறையிலும் சத்தியம் சாத்தியமா என்ற கேள்வி எழாமல் இல்லை?

பி.கு. இங்கு குறிப்பிடப்பட்ட நிகழ்வில் எனக்கு நேரிடையாகப் பயன் இல்லாத காரணத்தினால் கூட பொய்யின் பயன்பாடு பற்றி ஒரு மாற்றுச் சிந்தனை எழுந்திருக்கலாம்.

Friday, January 8, 2010

எப்பொழுதோ எழுதியது

எங்கு ஆரம்பித்தேன் இங்கு வருவதற்கு
என்ன செய்வேன் எங்கு செல்வேன்
இறை தேடி இன்பம் காண்பேனோ இல்லை நரை கூடி நின்று போவேனோ இன்று போகும் நாளையும் போகும் ஒருநாள் தெரியாமல் நின்று போகும் வாழ்க்கை

வருவதும் போவதுமே வாழ்க்கையெனில் என்ன வந்தால் என்ன, எங்கு போனால் என்ன?

காலத்தால் மாறுமெனில் காதல்
நியாயத்தில் வலி மட்டும் என் நெஞ்சில் அன்று காதோடு சொன்ன சொல்லோ காற்றோடு போனது நேற்று வெறுத்தென்னை பேசிய வார்த்தையில் விழிநீரோ வரண்டு போனது நீ சொன்ன வார்த்தையெல்லாம் நிஜமாக போகும்யெனில்
என் உடல் இருக்கும் உயிர் இருக்கும் உணர்வு இருக்காது நம்பிக்கை வையடி, என் நாடி துடிக்கும் வரை உன் நினைவை சுமப்பேன்.

Thursday, January 7, 2010

Test Cricket - A Class

Written on 5th Jan 2010

Just got back from my regular evening routine, turned on the laptop and logged in to watch 4th day of Aus vs Pak 2nd test match in Sydney.
After having 1st innings dismayed total 127 all out, Australia were leading 80 runs having lost 8 wickets by end of 3rd day.
I thought they would have bundled with the lead around 120-130 runs. However, Siddle and Hussey were still playing.
A record partnership for 9th wicket for 100 runs came with admirable century from Mike Hussey.

Pak started chasing 179 with a day and half in hand, openers played at blistering pace bringing boundaries from Siddle
especially. Bollinger got 1st wicket with his cross seamed delivery which has broken the gates for Aussies.

Ponting brought Johnson who took 2 wickets in his first over, Haddin literally plucked the ball from the air to his right.
Catches win Matches, another one by Nathan Hauritz grabbing a bullet back from Pakistan Skipper who hammered 3
classic boundaries just an over before tea by the same bowler. No idea whatsoever why Mohammad Yousuf played that shot
back to the bowler. Next to fall, Misbah Ul Haq went for a cut towards backward point found Hussey who rejoiced.

Suddenly, Pak were 5 down for 70 odd runs, Australia right back into the game in their own way. I believe only this team
in the world can fight back in the game whatever the situation.

Pakistan was folded for 139 in 38 overs somewhere in between T20 and ODIs (20 - 50 overs).
Pakistan hasn't played any Test cricket last year due to various reasons, no team toured their country for security reasons. Lack of Test cricket
made them lack of confidence and it seems to me like they completely forgot winning a Test match.

India reached the milestone of becoming No.1 team in Test matches recently, would they be able to play like Aussies. Perhaps they could.
However, India lost a ODI vs SL same day or day before actually played in different part of world. I started disliking the high scoring ODIs & T20s
after witnessing India - SL series at home.

Test cricket is a class, T20 is for mass.